இன்று அமாவாசை… சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை!

இன்று மார்கழி மாத அமாவாசை தினம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை, பெளர்ணமி தினங்களில் பக்தர்கள் குவிந்து மலையேறி சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இன்று அமாவாசை தினத்திற்கு சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயத்திற்கு பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு சதுரகிரியில் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரிக்கு மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று மலையேறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், மாத சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி என 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை ஜனவரி 12ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மார்கழி மாத அமாவாசைக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இம்மாத பிரதோஷ தினத்திலும் அனுமதி வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.