இன்று தைப்பூசம் : இன்று முருகனை வழிபட சிறந்த நேரம் இது தான்..!

முருகப் பெருமான், அசுரர்களை அழித்து, தேவர்கள் காப்பதற்காக அன்னை பராசக்தியிடம் இருந்து ஞானவேலை பெற்ற தினமே தைப்பூசமாக நாளாக கொண்டாடுகிறோம்.

வேல் வேறு, முருகன் வேறு கிடையாது. தமிழகம் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் மூலஸ்தானத்தில் முருகன் விக்ரஹத்திற்கு பதிலாக வேல் மட்டும் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. வேல் என்று வெற்றியின் அடையாளம் ஆகும். இது ஞானத்தின் அடையாளமாகவும் சொல்லப்படுகிறது. வெல் என்ற சொல்லில் இருந்து தோன்றியதே வேல் என்ற சொல்லாகும். வேலின் கூர்மையான பகுதி, அறிவு கூர்மையானதாக இருக்க வேண்டும் என்பதையும், அகண்டு விரிந்த பகுதி ஞானம் விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், கீழே உள்ள தடி போன்ற பகுதி அறிவு ஆழமானதாக இருக்கவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பதாகும்.

தை மாதத்தில் பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை நாம் தைப்பூச திருநாளாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது, பால்குடம் எடுப்பது, அன்னதானம் செய்வது என பல விதங்களில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.

தைப்பூசத்தில் விரதம் இருந்தால் என்ன கிடைக்கும்?

  • முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருந்தால் குழந்தை பிறக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்தால் கஷ்டங்கள் தீரும்.
  • தைப்பூசத்தில் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருந்தால், என்ன கேட்டாலும் கிடைக்கும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
  • வாழ்வில் வெற்றி வேண்டும், ஞானம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்பவர்கள் தைப்பூசத்தன்று வேல் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஆண்டு தைப்பூசம் ஜனவரி 25ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று தினம் இரவு 11.56 வரை பெளர்ணமி திதி உள்ளதால் நாள் முழுவதும் பெளர்ணமி திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பூசம் நட்சத்திரம் காலை 09.14 மணிக்கே துவங்குகிறது. பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணையும் நாளிலேயே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும். இதனால் காலை 09.20 முதல் 10.30 வரையிலான நேரத்திலும், மாலை 06.15 முதல் 07.30 வரையிலான நேரத்திலும் தைப்பூச வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பானதாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *