குருவாயூர் கோவில் தேவஸ்தான வளர்ப்பு யானைக்கு இன்று நினைவு நாள்..!
குருவாயூர் தேவஸ்தானத்தின் வளர்ப்பு யானைகளில் முக்கிய தலைமையிடத்தில் பங்கு வகித்தது குருவாயூர் பத்மநாபன். கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் 4-வது ஆண்டு நினைவுநாள் இன்று காலை 9 மணிக்கு குருவாயூர் தேவஸ்தான விருந்தினர் மாளிகை முன்பாக அமைக்கப்பட்டுள்ள குருவாயூர் பத்மநாபன் உருவச்சிலை முன் அனுசரிக்கப்படுகிறது.
குருவாயூர் பத்மநாபன் உருவச் சிலைக்கு முன் தேவஸ்தான சேர்மன் டாக்டர் வி.கே.விஜயன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,தேவஸ்தான ஊழியர்கள், யானை பாகர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் மலர்அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
மேலும், கஜரத்னம் குருவாயூர் பத்மநாபனின் உருவச்சிலைக்கு முன் தேவஸ்தானத்தின் 5 வளர்ப்பு யானைகள் மலர்தூவி நினைவஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அன்று குருவாயூர் பத்மநாபன் உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.