இன்று மாசி மகம்..! இன்று எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ?
மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோம்…
பொதுவாக அனைத்து மாதங்களிலும் வரும் பெளர்ணமி நாளும் சிவ பெருமான் மற்றும் முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. இதில் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் பெளர்ணமி மிகவும் விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து, வழிபடுவது மிக உயர்வான புண்ணிய பலன்களை தருவதுடன், பல மடங்கு அதிக பலன்களை தரக் கூடியதாகும்.
மாசி மாதத்தில் உபநயனம், காது குத்துதல், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் என எது செய்தாலும் விருத்தியாகும். அதனால்தான், மாசி மாதத்தை மகிமை மிக்க மாதம் என்கிறார்கள்.
மாசி மாதத்தில் நாம் செய்யும் சிவ வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, அம்மன் வழிபாடு, முக்கியமாக மகாலக்ஷ்மி வழிபாடு பன்னிரெண்டு மாசி மாதத்தில் செய்த பூஜைகளுக்கான பலன்களைக் கொடுக்கும். நம் சந்ததியினருக்கும் அந்தப் புண்ணியங்கள், பலன்களாகப் போய்ச் சேரும்!
மகம் ஜெகம் ஆளும் என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோம்…
இந்த ஆண்டு இத்தகைய புண்ணியம் வாய்ந்த மாசி மகப் பெருவிழா பிப்ரவரி 24ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. மக நட்சத்திரம் பிப்ரவரி 23ம் தேதி இரவு 08.40 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் உள்ளது.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.