Today Rasipalan (30.12.2023): இந்த ஆண்டின் கடைசி சனிக்கிழமை ..உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம்

எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் உண்டாகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். போட்டிகளில் பங்கு பெற்று மனம் மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் ஆதரவு உண்டாகும்.

ரிஷபம்

செல்வாக்கு அதிகரிக்கும். துணைவர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கைகள் ஏற்படும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் அறிமுகம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கடகம்

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். வர்த்தகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

சிம்மம்

செயல்களில் கவனம் வேண்டும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் பொறுமையுடன் செயல்படவும். குழப்பம் விலகும் நாள்.

கன்னி

பயணம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழிலில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உடலில் இருந்துவந்த அசதிகள் விலகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.

விருச்சிகம்

எதிர்பார்த்த வாய்ப்புகள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். வங்கி பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் தடைபட்ட தனவரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

பணிகளில் சில மாற்றமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் தொடர்புகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். வெளியூர் பயணங்களினால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கும்பம்

நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.

மீனம்

கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *