இன்றைய ராசிபலன், 13 ஜனவரி 2024

மேஷம் :

இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். கூட்டாக சேர்ந்து தொழில் செய்பவர்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். செல்வம் வந்து சேரும். சமுதாயத்தில் உங்கள் மீதுள்ள மதிப்பு அதிகரிக்கும் அனைவரும் உங்களுடன் நட்பு பாராட்ட விரும்புவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். கடின உழைப்பின் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான ஒரு நாளாக இருக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வாழ்க்கை துணையின் அறிவுரையை கேட்டு செயல்படுவது மிகவும் நல்லது. குடும்பமாக ஷாப்பிங் செல்ல வாய்ப்புகள் உண்டு. பண வரவு செலவில் கவனம் தேவை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு நற்செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மிதுனம்:

இன்றைய நாள் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும். குழந்தைகளின் படிப்பிற்காக பணம் முதலீடு செய்வீர்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும் பட்சத்தில் பணம் திரும்பி வர வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். மனைவியின் சொல்லைக் கேட்டு நடக்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினரால் நன்மை உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த சங்கடங்கள் சரியாகும். சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நாள் முடிவதற்குள் அவையும் சரியாகிவிடும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். புதிய பரிசுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

சிம்மம்:.

யாரிடமிருந்து பணம் வாங்க முயற்சி செய்தால் இது சரியான நேரமில்லை. பணம் வரவு செலவில் அதிக கவனம் தேவை. கடன் கொடுப்பதும் வாங்குவதும் சில நாட்களுக்கு பிறகு செய்யலாம். இப்போது செய்தால் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் அதிருப்தி நிலவும். குடும்பத்தாரோடு சேர்ந்து மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்புண்டு.

கன்னி:

அரசியலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தனது பேச்சாற்றலின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையைம் அதிகரிக்கும். புதிதாக தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டு. மனைவியின் பேச்சைக் கேட்டு அதன் வழி நடந்தால் வெற்றி நிச்சயம். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம்:

இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்க வாய்ப்புகள் உண்டு. நாள் முழுவதும் சிக்கல்களை சரி செய்வதிலேயே செலவிடுவீர்கள். குறிப்பாக தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அதிகமாகும். குடும்பத்தார் மற்றும் பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டும். நாளின் முடிவில் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகி விடும். மிகவும் ரிலாக்ஸாக உணர்வீர்கள். உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். உங்களின் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறிது அதிக அளவு பணம் செலவழிப்பீர்கள். இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பண வரவு செலவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. பொருளாதார ரீதியாக திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே எதிர்கால பிரச்சனைகளை தவிர்க்க முடியும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் நிச்சயமாக வாய்ப்புகள் உண்டு. காதல் கை கூடும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் நன்றாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல நிலையை அடைவீர்கள். தொழில் செய்பவர்களுக்கு பல வழிகளில் இருந்து லாபம் கிடைக்கும். மிகவும் வெற்றிகரமான ஒரு நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள். உடன்பிறந்தவர்களிடமிருந்து பரிசு பொருட்கள் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விரும்பத்தகாத சில செய்திகள் அல்லது சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதளவில் ரிலாக்ஸாக இருப்பீர்கள். எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியான ஒரு நாளாக இருக்கும். விருந்தினர்களின் வருகைக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் பணம் சிறிது செலவாகும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏதேனும் மனஸ்தாபமிருந்தால் அவை அனைத்தும் இன்று சரியாகிவிடும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றைய நாள் மிகவும் சிறப்பான வெற்றிகரமான ஒரு நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தொழில் தொடங்க முயற்சி செய்தவர்கள் இன்று வெற்றிகரமாக புதிய தொழிலை துவங்குவார்கள். புதிய செயலை செய்வதற்கு முன்பு அனுபவசாலிகளிடமும் அல்லது பெரியவர்களிடமும் அறிவுரை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும். தொழிலில் புதிய எதிரிகள் உருவாக வாய்ப்பு உண்டு. உங்களது வளர்ச்சியை பார்த்து எதிரிகள் பொறாமை கொள்வார்கள். சமூக நல அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாக சமுதாயத்தில் உங்களின் மீது மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். தந்தையின் பேச்சைக் கேட்டு நடப்பதும் பெரியோர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செல்வ செழிப்பான ஒரு நாளாக இருக்கும். நீங்களே எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். உணவு பழக்கத்தில் அதிக கவனம் தேவை. இல்லை எனில் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். எனவே உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மாலை நேரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். திருமணம் ஆகாமல் இருக்கும் நபர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் கை கூடும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஒட்டு மொத்தத்தில் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான ஒரு நாளாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *