Tomato Pickle : தளதளன்னு தக்காளி ஊறுகாய்! இப்படி செஞ்சு பாருங்க!
புளிக்கரைசல் – ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
வெந்தயப்பொடி – அரை ஸ்பூன்
கடுகு பொடி – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தக்காளிகளை நன்றாக அலசி ஒரு சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, நறுக்க வேண்டும். தக்காளிகள் ஈரமாக இருக்கக்கூடாது. தக்காளியில் தண்ணீர் இருக்கக்கூடாது. தக்காளி பெங்களூர் தக்காளி மற்றும் நாட்டுத்தக்காளி என இரண்டும் சேர்ந்த கலவையாக எடுத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் சுவை, நிறம் இரண்டும் நன்றாக இருக்கும்.
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, அதில் நறுக்கிய தக்காளி பழங்களை சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு மற்றும் புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். தக்காளியின் புளிப்பு சுவைக்கு ஏற்ப புளியை சேர்க்க வேண்டும்.
பாத்திரத்தை மூடி, அரை மணிநேரம் நன்றாக வேகவைத்து தக்காளி குழைய வேண்டும்.
அடிப்பிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். தக்காளி கொதித்து வெளியே தெளிக்கும். எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், வெந்தயப்பொடி மற்றும் கடுகுப்பொடி ஆகிய அனைத்து பொடியையும் சேர்க்க வேண்டும்.
நன்றாக கலந்து குறைவான தீயில் தண்ணீர் நன்றாக வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
இதற்கிடையில் எண்ணெயை சூடாக்க வேண்டும். கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதை ஊறுகாயில் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை காத்திருக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும், ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை நீங்கள் ஃபிரிட்ஜில் அல்லது வெளியில் கூட வைத்துக்கொள்ளலாம்.
குறிப்புகள்
தக்காளியை நறுக்காமல் அரைத்துக்கொள்ளலாம். தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக இதை நீங்கள் சுற்றுலாக்களுக்கு எடுத்துச்செல்லாம். இது இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர்தான் சுவைதரும்.
எப்போதும் காய்ந்த ஸ்பூன்களை வைத்துதான் எடுக்க வேண்டும்.