நாளை பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டம்..!
சென்னையில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நாளை 4-ம் தேதி மாநில மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாநில மையக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர்களான ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.