நாளை மகா சிவராத்திரி 2024 : செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை..!

மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு. இந்த நாளில் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

செய்ய வேண்டியவைகள்

1. உடல்நிலை நன்றாக இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் இருக்கலாம். அதுவே வயதானவர்கள், உடல்நல கோளாறு கொண்டவர்கள் பால், பழம் அல்லது உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மருத்துவரின் அறிவுரைப்படி விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

2. மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி திதியில் கடைப்பிடிக்கக்கூடிய மகா சிவராத்திரி தினத்தன்று அதிகாலையிலேயே குளித்து விரதத்தைத் தொடங்க வேண்டும்.

3. சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம். அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருத்தல் நல்லது.

4. அதுமட்டுமல்லாமல் சிவாய நம ஓம், சிவாய நம் ஓம் என ஒரே ஒருமுறை சொன்னால் போதும் பல நூறு முறை சொன்னதற்கு பலன் கிடைக்கும்.

5. தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

6. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

7. ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் முழு பலனை தரும். சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும்.

செய்யக்கூடாதவை

1. இந்த தினத்தில் மாமிசம், துரித உணவுகளை கண்டிப்பாக உண்ணக்கூடாது. மது அருந்துதல் கூடாது. விழித்திருப்பதற்காக சீட்டு ஆடுவது, செல்போனில் விளையாடுவது, கேளிக்கையில் ஈடுபடுவது அறவே தவிர்க்க வேண்டும்.

2. இந்த புனிதமான தினத்தில் பொய் பேசுதல், புறம் பேசுதல், பிறரை திட்டுவது, அடிப்பது, சுக போகங்கள், தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் அனுபவிப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

3. நமக்கு பாவம் வந்து சேரும். இரவில் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, பகலில் உறங்கக்கூடாது. சிவாலயங்களுக்குச் செல்லக்கூடிய பக்தர்களுக்கு கொடுக்கும் அன்னதானத்தை வாங்கி உண்ணக் கூடாது.

4. மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது. மனிதர்களுக்கு மிக முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *