நாளை தான் கடைசி நாள்..! உடனே மாத்திடுங்க..!
விதிகளுக்கு இணங்காத சில செயல்பாடுகளும், முறையற்ற சில நடவடிக்கைகளும் கண்டறியப்பட்டதன் பேரில், ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும் டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்டேக் டாப்-அப்கள் செய்வதை நிறுத்துமாறு பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ஆர்பிஐ உத்தரவிட்டது. முன்னர் பிப்ரவரி 29 ஆக இருந்த காலக்கெடு அதன் பின்னர் மார்ச் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
எந்ததெந்த சேவைகள் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு கிடைக்காது. எந்தெந்த சேவைகள் தொடரும் என்பதை இப்போது பேடிஎம் யூசர்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
எந்தெந்த சேவைகள் தொடரும்: பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்கள் தங்களது அக்கவுண்ட் அல்லது வாலெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ளலாம். பார்ட்னர் பேங்குகளில் இருந்து ரீபண்ட்கள் (Refunds) மற்றும் கேஷ்பேக் (Cashback) ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். அதேபோல பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து வட்டிகளை பெற்று கொள்ளலாம்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட்டில் பேலன்ஸ் இருக்கும் வரையில் ஈஎம்ஐ போன்ற ஆட்டோ டெபிட்கள் மற்றும் என்ஏசிஎச் (NACH) டெபிட்களை பெற்றுக் கொள்ளலாம். வணிகர்களுக்கு பேமெண்ட் செய்ய பேடிஎம் பேமெண்ட் வாலெட்டில் (Paytm Payments Bank Wallet) இருக்கும் பேலன்ஸை பயன்படுத்தி கொள்ளலாம். மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் கஸ்டமர்கள் தங்களது அக்கவுண்ட்டை வேறு வங்கிக்கு மாற்றவும், பேலன்ஸை வேறு அக்கவுண்ட்டுக்கு பரிமாற்றவும் அனுமதி வழங்கப்படும். பேலன்ஸ் தொகை இருந்தால் மட்டும் பாஸ்டேக் சேவைகளை (Fastag services) தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், எந்தவொரு கூடுதல் தொகையையும் சேர்க்க முடியாது.
யுபிஐ (UPI) அல்லது ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும். அக்கவுண்ட்டில் இருக்கும் நிலுவைத் தொகையை பயன்படுத்தி மாதாந்திர ஓடிடிக்கு பணம் செலுத்தலாம். இருப்பினும், மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு, மற்றொரு பேங்க் அக்கவுண்ட் மூலம் செய்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் பேடிஎம் சேவைகளை தொடர்ந்து பெற மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற வேண்டும் அல்லது பேடிஎம் பேமெண்ட் பேங்குக்கு நோடல் அக்கவுண்ட்டாக வரும் ஆக்சிஸ் பேங்குக்கு மாற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, சம்பளம் பெறுதல், ஈஎம்ஐ, பாஸ்டேக் போன்ற சேவைகளை தொடர்ந்து கிடைக்கும்.
எந்தெந்த சேவைகள் தொடராது: பேடிஎம் வாலெட், பாஸ்டேக் போன்ற எதிலும் டாப்-அப் செய்துகொள்ள முடியாது. மற்ற பேங்க் அக்கவுண்ட்களில் இருந்து எந்தவொரு தொகையையும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டில் பெற்று கொள்ள முடியாது. சம்பளம் அல்லது பிற நேரடி பரிமாற்றங்களுக்கு அனுமதி கிடைக்காது. பேடிஎம் மூலம் வழங்கப்பட்ட ஃபாஸ்டாக் பேலன்ஸை வேறொரு ஃபாஸ்டாக்குக்கு மாற்ற முடியாது. யுபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் போன்ற எந்தவொரு முறையிலும் பேடிஎம் பேமெண்ட் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை அனுப்ப முடியாது.