நாளை கோவையில் இறைச்சி கடைகள் இயங்க தடை..!
கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எதிர் வரும் 25.01.2024 அன்று ‘வள்ளலார் தினம்’ அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.
எனவே, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.3