நாக்கு ஊறும் நார்த்தங்காய் தீயல்: இப்படி செய்யுங்க
தேவையான பொருட்கள்
4 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1 கொத்து கருவேப்பிலை
2 நார்த்தங்காய் நறுக்கியது
பூண்டு 13
இஞ்சி பெரிய துண்டு நறுக்கியது
மிளகாய் பொடி 1 ½ ஸ்பூன்
பச்சை மிளகாய் 8
சின்ன வெங்காய் 8
செய்முறை : பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கடுகு சேர்க்கவும். தொடர்ந்த் கருவேப்பிலை சேர்க்கவும். தொடர்ந்து இதில் நார்த்தங்காய் நறுக்கியதை சேர்த்து கிளரவும். நார்த்தங்காய் நிறம் மாறியதும், அதில் சின்ன வெங்காயம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நறுக்கிய பூண்டு, இஞ்சி நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து மிளகாய் பொடி சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து உப்பு சேர்த்து கொள்ளவும். தற்போது ருசி பார்க்கவும். அதிக கசப்பு இருந்தால் வெல்லம் சேர்த்து கிளரவும்.