இந்தியாவின் டாப் 10 கார் தயாரிப்பாளர்கள் – ஜனவரி 2024
கடந்த ஜனவரி 2024 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை கைப்பற்றி நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி முதலிடத்தில் 1,66,802 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 1,47,348 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது.
மாருதியின் விற்பனை எணிக்கையில் வேகன்ஆர், ஃபிரான்க்ஸ், டிசையர் மற்றும் பலேனோ உட்பட ஸ்விஃப்ட், கிராண்ட் விட்டாரா ஆகியவை அமோக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. ஆனால் ஜிம்னி, சியாஸ் விற்பனை மிக மோசமான வீழ்ச்சி சந்தித்திருப்பதுடன், ஆல்டோ விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 55 % வீழ்ச்சி கண்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இரண்டாமிடத்தில் 57,115 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 50,106 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இந்நிறுவன எலைட் ஐ20, கிராண்ட் ஐ10 விற்பனை சரிவடைந்துள்ளது. அடுத்த ஹூண்டாய் கிரெட்டா விற்பனை எண்ணிக்கை முக்கிய பங்காற்றுகின்றது.
டாடா மோட்டார்ஸ் மூன்றாமிடத்தில் 53,635 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே ஜனவரி 2023ல் விற்பனை 47,990 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. டாடா நிறுவனத்துக்கு நெக்ஸான், பஞ்ச், டியாகோ மற்றும் டிகோர் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
முதல் 10 இடங்களில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை அதிகபட்சமாக 82.4 % அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக, மஹிந்திரா மற்றும் ரெனால்ட் உள்ளது. வீழ்ச்சியில் கியா மற்றும் எம்ஜி உள்ளது.