இந்தியாவின் டாப் 10 பணக்கார கோயில்கள்

இந்தியாவில் எண்ணற்ற பெரிய கோயில்கள் உள்ளன, கோயில் தேசம் என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இங்கு பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் உள்ள நிலையில் புதிதாக அந்தப் பட்டியலில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலும் சேர்கின்றது.

இந்தக் கோயில்கள் எல்லாம் உலகத் தரம் வாய்ந்த கட்டடக்கலையால் அமைக்கப்பட்டவை. நான்கு புறமும் சுற்றுச்சுவர் இருக்க நடுவில் அதிகசக்தி வாய்ந்த தெய்வங்கள் இந்தக் கோயில்களில் குடியிருக்கின்றன. இதில் மிகப் பெரிய பணக்கார கோயில்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

பத்மநாப ஸ்வாமி கோயில்: கேரளத்தில் இந்த அழகான பத்மநாப ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே மிகப் பெரும் பணக்காரக் கோயில் இதுவாகும். இதன் மூலவராக விஷ்ணு உள்ளார்.

திருப்பதி பாலாஜி கோயில்: ஆந்திரப் பிரதேசத்தின் எழில்மிகு கோயில் திருப்பதி பாலாஜி கோயிலாகும். இதுவும் உலகின் மிகப் பெரிய பணக்காரக் கோயில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தக் கோயிலின் உண்டியல் வசூல் வருடந்தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை தாண்டுகிறது.

ஷீரடி சாய் பாபா கோயில்: பணக்காரக் கோயில்களில் மூன்றாவது இடத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயில் பல அதிசயங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறும்.

வைஷ்ணவ தேவி கோயில்: நான்காவது இடத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

சித்தி விநாயகர் கோயில்: பகவான் கனேஷ் மூலவராக உள்ள இந்த சித்தி விநாயகர் கோயிலில் வந்து நேர்ந்து கொண்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாக உள்ளது.

ஜெகநாதர் கோயில்: ஓடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவர். இந்தக் கோயிலின் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது. பணக்காரக் கோயில் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

குருவாயூர் கோயில்: கேரளாவின் குருவாயூரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மூலவர் குருவாயூரப்பன். விஷ்ணு பகவானின் அவதாரமாக குருவாயூரப்பன் இங்கு குடி கொண்டுள்ளார்.

மீனாட்சி அம்மன் கோயில்: கட்டடக்கலைக்குப் பிரசித்தி பெற்றது தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில். நாட்டின் எட்டாவது பணக்காரக் கோயிலாகத் திகழ்கிறது.

ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில்: புனிதமான காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட்டால் மனிதர்களின் பாவங்கள் போக்கப்பட்டு முக்தியடைவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்தியாவின் புனித நதியாகக் கருதப்படும் கங்கைக் கரையோரமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது. நாட்டின் பணக்காரக் கோயில்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

தங்கக் கோயில்: நாட்டின் பணக்காரக் கோயில்களில் பத்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்தில் இந்தப் புனித தங்கக் கோயில் அமைந்துள்ளது. சீக்கியர்கள் வழிபடும் புனிதக் கோயிலாகும். இந்தக் கோயிலில் தினமும் லட்சக்கணக்கானோருக்கு இலவசமாக உணவளிக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *