2023 நவம்பரில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 டீசல் கார்கள்!
கார் வாங்க திட்டமிடும் போது குறிப்பிட்ட காரில் பயன்படுத்தப்படும் எரிபொருள் வகை கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும். பெட்ரோலை விட டீசல் சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்க கூடியது.
எனவே காரின் ஸ்டைல், டிசைன் மற்றும் அம்சங்களுடன் சேர்த்து சிறந்த எரிபொருள் செயல்திறன் கொண்ட கார்களை வாங்க விரும்பும் மக்கள் மத்தியில் டீசல் கார்கள் பிரபலமாக உள்ளன. அடிப்படையில் டீசல் என்ஜின்கள் குறைந்த இன்ஜின் ஆர்பிஎம்-மில் அதிக டார்க்கை உருவாக்குகின்றன. இதன் காரணமாக இந்திய மக்கள் டீசல் கார்களை அதிக விரும்பி வாங்குகின்றனர். அதே போல பெரிய எஸ்யூவி-க்கள் பொதுவாக டீசல் பவர்டிரெய்னுடன் விற்கப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். எனினும் பெட்ரோல் காருடன் ஒப்பிடும்போது இந்தியாவில் டீசல் கார்களின் விலை சற்று அதிகம்.
பெட்ரோல் என்ஜின்களுடன் ஒப்பிடும்போது டீசல் எஞ்சின்கள் மிகவும் சிக்கலான தொழில்நுட்பத்தை கொண்டிருப்பது இந்த விலை இடைவெளிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே கடந்த மாதம் அதாவது நவம்பர் 2023-ல் இந்திய வாகனத் துறை 28.54 லட்சம் யூனிட் விற்பனையுடன் அதிக வாகனங்களை விற்று சாதனை படைத்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவான அதிகபட்ச விற்பனை எண்ணிக்கையான 25.69 யூனிட்களை நவம்பர் 2023 விற்பனை விஞ்சியுள்ளது. சரி, நீங்கள் புதிதாக டீசல் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்தியாவில் 2023 நவம்பரில் அதிகம் விற்பனையாகி உள்ள டாப் 5 டீசல் கார்கள் பற்றிய பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள். 2023-ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 டீசல் கார்களின் பட்டியல்.
டாடா நெக்ஸான்:
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் காரின் விற்பனை கடந்த நவம்பர் 2023-ல் 14,916 யூனிட்ஸ்களாக இருந்தது. புதிய டாடா நெக்ஸானில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 115hp பவரையும் 260Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இந்த எஞ்சின் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ-என்:
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் காரின் விற்பனை கடந்த மாதம் நவம்பரில் 12,185 யூனிட்ஸ்களாக உள்ளது. 2.2-லிட்டர் mHawk டீசல் எஞ்சினை கொண்டுள்ள ஸ்கார்பியோ-என், 170hp பவரையும், 370 Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யூவி-யானது 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் க்ரெட்டா:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிட்-சைஸ் டீசல் எஸ்யூவி-க்களில் ஒன்றாக ஹூண்டாய் க்ரெட்டா இருந்து வருகிறது. கடந்த மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் 11,814 யூனிட்ஸ்களை இந்தியாவில் விற்றுள்ளது. இந்த காரில் 1.5-லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 112hp பவர் மற்றும் 250Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த எஞ்சின் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ்:
கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 11,684 யூனிட்ஸ் செல்டோஸ் கார்களை இந்தியாவில் விற்றுள்ளது. இந்த கார் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சினை கொண்டிருக்கிறது மற்றும் இது 112hp பவர் மற்றும் 250Nm பீக் டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் அடங்கும்.