ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்ஸ்களுடன் கிடைக்கும் டாப் 5 எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வாகன விற்பனை வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. புதிய கார் வாங்கும் நுகர்வோர் இடையே இரு தயாரிப்பை கருதி கொள்ள கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக பாதுகாப்பு மாறி இருக்கிறது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் பரந்த அளவிலான பாதுகாப்பு அம்சங்களை வாடிகையாளர்களுக்கு வழங்க முனைப்பு காட்டுகிறார்கள். முன்பு ஹை-என்ட் மாடல் கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அம்சங்களில் பல, இப்போது மலிவு விலை மற்றும் மிட்-ரேஞ்ச் விலையிலான கார் மாடல்களில் கொடுக்கப்பட்டு வருகிறது

இத்தகைய பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்ஸ் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மாஸ்-மார்க்கெட் செக்மென்ட்டில் இருக்கும் பல நவீன கார்களில், 6 ஏர்பேக்ஸ் இப்போது ஸ்டாண்டர்டாக வருகின்றன. இந்த வகையில் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்ஸ்களுடன் ரூ.10 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் டாப் எஸ்யூவி-க்களை இங்கே பார்க்கலாம்.

டாடா நெக்சான் (Tata Nexon):

முதன் முதலாக கடந்த 2017-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவி-யாக இருந்து வருகிறது நெக்சான். இந்த காம்பாக்ட் எஸ்யூவி-யானது NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்ஸை பெற்றுள்ளதன் மூலம் கார் பாதுகாப்பு பிரிவில் ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது, இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் தொடர்கிறது. ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் டாடா நெக்ஸானின் அப்டேட்டட் மாடலின் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் நிலையான அம்சமாக 6 ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் (Kia Seltos):

இந்தியாவில் கியா அறிமுகப்படுத்திய முதல் கார் செல்டோஸ் ஆகும். தென் கொரிய நிறுவனத்தின் சிறந்த விற்பனை மாடலாக கியா செல்டோஸ் தற்போது இந்தியாவில் உள்ளது. இந்த கார் டிரைவர் மற்றும் இதில் பயணிப்போருக்கு வசதியான ரைட் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பல மேம்பட்ட தொழில்நுட்ப-உதவி அம்சங்களுடன் வருகிறது. ரூ.10.89 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் கியா செல்டோஸின் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் நிலையான பாதுகாப்பு அம்சமாக 6 ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter):

கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டெர் எஸ்யூவி-யை அறிமுகப்படுத்தியது. அது முதல் நாட்டில் மிகவும் மலிவு விலையில் பல அம்சங்களை கொண்டிருக்கும் எஸ்யூவி-க்களில் ஒன்றாக இருக்கிறது.ஃபேக்ட்ரி-ஃபிட்டட் டேஷ்கேம் போன்ற பல கிளாஸ்-லீடிங் அம்சங்களுடன் எக்ஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடலின் அனைத்து வேரியன்ட்ஸ்களிலும் 6 ஏர்பேக்ஸ்களை ஸ்டாண்டர்டாக பெற்று பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதி செய்கிறது மற்றும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.28 லட்சம் வரை இருக்கிறது.

கியா சோனட் (Kia Sonet):

கியா நிறுவனத்தின் மிக மலிவு விலையில் எஸ்யூவி-யாக சோனெட் உள்ளது. இந்த மாடல் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. இதிலிருக்கும் முக்கிய பாதுகாப்பு அம்சங்களில் முக்கியமானது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக் இருப்பது. கியாவின் சோனட் கார் இந்தியாவில் ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue):

ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, இந்த பட்டியலில் உள்ள மற்றொரு எஸ்யூவி ஆகும். இதிலும் ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில் இந்த காம்பாக்ட் எஸ்யூவி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி-க்களில் ஒன்றாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *