மொத்தம் 55,000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.81,000 சம்பளம்..!

இந்திய அஞ்சல் துறை ஆனது நாட்டின் மிகப்பெரும் துறையாக அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கும் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இத்துறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை ஊழியர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில் போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்ட்மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் என்று மொத்தம் ஐந்து பிரிவுகளில் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் வரை நியமனம் செய்யப்பட உள்ளது.

இப்பணிகளுக்கு ரூபாய் 25500 முதல் ரூபாய் 81 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பதவிகள் விவரம்

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட் மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பல்பணி பணியாளர்) என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்வித் தகுதி

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேநேரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்

போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100 வழங்கப்படும். போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்கள் எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் ஆணையத்தால் நிரப்பப்படும். இந்தப் பதவிகளுக்கான அறிவிப்பு தனித்தனியாக, படிப்பு வாரியாக வெளியிடப்படும்.

இதுதவிர, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கிராம தபால் ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இதற்கு 12,000 முதல் 15000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *