மொத்தமாக எல்லாமே மாறுது! ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே வருகிறது புது பஸ் நிலையம்! செம

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

நேற்று மாலையில் இருந்து ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

புதிய பேருந்து நிலையம்: இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும் என CMDA தெரிவித்துள்ளது.

அதுவும் அடுத்த மாதமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர்.

ஆம்னி பேருந்துகள் கட்டுப்பாடு: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியார் பேருந்துகளை புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசு பேருந்துகள் உள்ளே வராது என்பதால் அதற்கான புக்கிங் வெகுவாக குறைந்ததை அடுத்து ஆம்னி பேருந்துகளை இனி உள்ளே வர விடக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உள்ளே வருவதற்க்கு ஆம்னி மட்டுமே ஒரே வழி என்பதால் மக்கள் பலரும் அதையே விரும்புகிறார்கள் என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம். இதை சரிகட்டவே புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.

இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் கடந்த 18ம் தேதி முதல் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் முடிந்த நிலையில் இனி பேருந்துகள் கோயம்பேடு வரை வராது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *