பொதுவெளியில் மாற்று பிராண்டு காரை தன்னுடைய சொந்த கார் என பெருமையாக காட்டிய டொயோட்டா சேர்மேன்..
இந்தியாவில் ‘பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024’ (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சி தலைநகர் டெல்லியில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ தொடங்கி இருக்கின்றது.
இதைபோலவே ஓர் பிரத்யேக வாகனம் உலகம் சார்ந்த ஷோ ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ‘2024 டோக்யோ ஆட்டோ சலுன்’ (2024 Tokyo Auto Salon) எனும் பெயரிலேயே அந்த ஷோ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஷோவிலேயே டொயோட்டா நிறுவனத்தின் சேர்மேனான அகியோ டொயோடா-வின் தனிப்பட்ட கார் மாடல் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அகியோ டொயோடாவுக்கு பிடித்தமான கார் மாடல்களில் ஒன்றாக இது இருப்பதனாலேயே அக்கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னியே அந்த கார் மாடலாகும். இந்த காரையே அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே டோக்யோ ஆட்டோ சலூன் ஷோவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட டொயோட்டா கஸூ ரேசிங் ஸ்டாலில் அக்கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மிகப் பெரிய வாகன உற்பத்தி சாம்ராஜ்யத்தை கட்டி ஆளக்கூடிய நபர் இந்த காரையா பயன்படுத்தி வருகின்றார் என்றே இந்த நிகழ்வு நம்மில் பலரை நினைக்கச் செய்திருக்கின்றது. குறிப்பாக, தன்னுடைய பிராண்ட் காரை பயன்படுத்தாமல் வேறொரு பிராண்டின் காரை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
அதேவேளையில் வாகனங்கள் மீது அவர் வைத்திருக்கும் அதீத ஆர்வத்தை வெளிக்காட்டும் வகையிலும் இந்த கார் காட்சிப்படுத்தல் சம்பவம் அமைந்திருக்கின்றது. மேலும், அவரின் எளிமையான மன குணத்தையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதுபோல பல மாற்று பிராண்டுகளின் கார்களை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். பெரும்பாலும் அவர் எளிமையான கார்களையே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
மாருதி சுஸுகி ஜிம்னி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னியே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வெகுவிரைவில் மூன்று டோர்கள் கொண்ட ஜிம்னியும் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கான பணியிலேயே மாருதி சுஸுகி தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சொல்லப்போனால் மிக சிறப்பான விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஆஃப்-ரோடு எஸ்யூவி ரக காராக ஜிம்னி இருக்கின்றது. மூன்று கதவுகள் கொண்ட ஜிம்னியைக் காட்டிலம் அளவில் சற்று பெரியதாக ஐந்து கதவுகள் கொண்ட ஜிம்னி இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதானலேயே இந்தியர்கள் மத்தியில் ஜிம்னிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
ரூ. 10.74 லட்சம் தொடங்கி ரூ. 15.05 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வந்த காரே ஜிம்னி ஆகும். இதற்கு மட்டுமல்ல ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்கா கார் மாடலுக்கும் ஜிம்னி போட்டியாகும். டீசல் எஞ்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே ஃபோர்ஸ் கூர்கா விற்பனைக்குக் கிடைக்கின்றது.
அதேவேளையில், மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னியோ பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேநேரத்தில் டிரான்ஸ்மிஷனாக ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சினைப் பொருத்த வரை கே15பி 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டார் ஜிம்னியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.