14 மாதத்தில் விற்பனையில் சாதனைப் படைத்த டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்..!
டொயோட்டாவின் ஹைபிரிட் MPV-ஆன இன்னோவா ஹைகிராஸ் காரானது 50,000 யூனிட்ஸ்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை சமீபத்தில் எட்டி உள்ளது. TKM (Toyota Kirloskar Motor) நிறுவனம் இந்த MPV-ஐ கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் அறிமுகமான வெறும் 14 மாதங்களுக்குள் இந்த கார் 50,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இன்னோவா ஹைகிராஸ் காரானது டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்கும் பிரீமியம் கார்களில் ஒன்றாகும். டொயோட்டா நிறுவனம் இதனை 6 மற்றும் 7 சீட்டர் கான்ஃபிகரேஷன்களில் மைல்ட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது. இது Innova Crysta-வை விட குறிப்பிடத்தக்க அப்கிரேட் மற்றும் ஒரு ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷனை வழங்குகிறது.
இந்தியாவில் Innova Hycross மற்றும் Innova Crysta ஆகியவை ஒரே நேரத்தில் விற்கப்பட்டு வருகின்றன. இன்னோவோ பிராண்ட்டானது அதன் லோ டோட்டல் காஸ்ட் ஆஃப் ஓனர்ஷிப்பால் (TCO) மிகவும் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது. இதன் காரணமாகவே தனியார் மற்றும் வணிக ரீதியிலான வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரபலமான காராக இருந்து வருகிறது. இந்த மாடல் 3 ஆண்டுகள்/100,000 கிமீ வாரண்டியுடன் வருகிறது, 5 ஆண்டுகள்/220,000 கிமீ வரை எக்ஸ்டெண்ட் செய்து கொள்ளலாம். மேலும் இலவச ரோட்சைட் அசிஸ்டென்ஸ் மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்களை வழங்குகிறது. ஹைபிரிட் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் 160,000 கிமீ வாரண்டி வழங்கப்டுகிறது.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸை 5 வேரியன்ட்ஸ்களில் வழங்குகிறது, இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 19.77 லட்சத்திலிருந்து ரூ. 30.68 லட்சம் வரை இருக்கிறது. இன்னோவா ஹைகிராஸ் காரானது TNGA பிளாட்ஃபார்மில் கட்டப்பட்டுள்ளது, பாரம்பரிய லேடர்-ஆன்-ஃபிரேம் கட்டுமானத்திற்கு பதிலாக இது ஒரு monocoque பாடியை கொண்டுள்ளது. இந்த காரில் மூன்று வரிசைகளில் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின் சீட்களை மடித்தால் மொத்தமாக 991-லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இது 185 மிமீ என்ற சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டிருக்கிறது.
அம்சங்களின் அடிப்படையில் இந்த இன்னோவா ஹை கிராஸில் 10-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் கிளைமேட் கன்ரோல் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ், மின்சாரத்தில் இயங்கக்கூடிய டெயில்கேட், LED DRLs, எலெக்ட்ரிகலி அட்ஜஸ்ட்டபிள் செகன்ட்-ரோ சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் கனெக்டட் கார் டெக்னலாஜி போன்ற பல அம்சங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை இன்னோவா ஹைக்ராஸ் டீசல் எஞ்சினுக்குப் பதிலாக வலுவான ஹைப்ரிட் எஞ்சினை கொண்டுள்ளது. 2.0-லிட்டர் 4-சிலிண்டர் மோட்டார் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து 183bhp வெளியீட்டை வழங்குகிறது. இந்த காரின் ஹைப்ரிட் மாடல் 40% தூரத்தையும், 60% நேரத்தையும் மின்சாரத்தில் இயக்கக்கூடியது, இதன் மூலம் அதிக எரிபொருள் செயல்திறனை உறுதி செய்கிறது. 23.24 kmpl என்ற மைலேஜ் திறனை இது கொண்டுள்ளது.
டொயோட்டாவை சேர்ந்த சேல்ஸ் & மார்க்கெட்டிங் உயரதிகாரியான சபரி மனோகர் பேசுகையில், ஹைக்ராஸ் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களில் 50,000 யூனிட் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த தயாரிப்பு மீது எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே வாடிக்கையாளர்களிடம் வலுவான வரவேற்பைப் பெற்றது. சௌகரியம், வசதி, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் புரட்சியை இந்த கார் ஏற்படுத்தியுள்ளது. இதனால் Innova Hycross குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.