ருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு – ஜவுளித் தொழிலில் புதிய கவலை

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு பஞ்சை வாங்கி வருவதால் எதிர்வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோருக்கு மட்டும் விற்பனை செய்ய இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளித் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் வரை இருப்பது வழக்கம். கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான பருத்தி சீசனில் மொத்தம் 336.60 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 316.57 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

பருத்தி சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பருத்தியின் விலை தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில், தொழில்முனைவோரை விட வர்த்தகர்களே அதிகம் பருத்தியை வாங்கி வருவதாகவும், ஜவுளித் தொழில் துறையினருக்கு மட்டும் இந்திய பருத்திக் கழகம் பருத்தியை விற்பனை செய்வதை உறுதிப் படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்க ( சைமா ) தலைவர் சுந்தர ராமன், இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் ( சிட்டி ) தலைவர் ராஜ்குமார், ‘சிஸ்பா’ தொழில் அமைப்பின் கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *