டிராஃபிக் சிக்னல் ஒரு தினுசா இருக்கே!! ஜப்பான் டெக்னாலஜி… சிக்னலில் நிற்கும்போது இனி இந்த பிரச்சனை இருக்காது

MODERATO என்ற ஜப்பானிய டிராஃபிக் சிக்னல் தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய டிராஃபிக் சிக்னலிங் சிஸ்டம் பெங்களூரில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஜப்பானிய அட்வான்ஸ்டு சிஸ்டத்தின் பயன்கள் என்னென்ன? இதை ஏன் நம் சென்னை டிராஃபிக்கிற்கு கொண்டுவரக்கூடாது? என்பதை பற்றி விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

ஜப்பானின் MODERATO (மேனேஜ்மெண்ட் ஆஃப் ஆரிஜின்-டெஸ்டினேஷன்-ரிலேடெட் அடாப்டஷன் ஃபார் டிராஃபிக் ஆப்டிமைசேஷன்) என்ற தொழிற்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டிராஃபிக் சிக்னலிங் சிஸ்டம் பெங்களூரில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழில் இந்த தொழிற்நுட்பத்தின் பெயர், போக்குவரத்து மேம்படுத்தலுக்கான தோற்றம்-இலக்கு தொடர்பான தழுவல் மேலாண்மை என்பதாகும்.

பெங்களூரின் உல்சூர் பகுதிக்கு அருகே கென்சிங்டன் சாலையில் இந்த அட்வான்ஸ்டு டிராஃபிக் சிக்னலிங் சிஸ்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஜப்பானிய டெக்னாலஜியில் உருவாக்கப்பட்ட டிராஃபிக் சிக்னல்ஸ் பெங்களூரின் முக்கியமான எம்ஜி சாலை, ஓசூர் சாலை மற்றும் பழைய மெட்ராஸ் சாலை என மொத்தம் 28 இடங்களில் சில மாதங்களுக்கு முன்பே பொருத்தப்பட்டுவிட்டன.

ஆனால், அவை எதுவும் தற்போதுவரையில் பயன்படுத்தப்படமால் இருந்துவந்த நிலையில், தற்போது கென்சிங்டன் சாலையில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதால், பெங்களூரில் மற்ற இடங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஆக்டிவேட் செய்யப்படும். இந்த ஜப்பானிய டிராஃபிக் சிக்னல் சிஸ்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையை பொறுத்து செயல்படும்.

அதாவது, இப்போதுள்ள டிராஃபிக் சிக்னல்கள் அதற்கு வழங்கப்பட்ட டேடாவின்படி ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் சிக்னல்களை தொடர்ந்து மாற்றுக்கின்றன. மற்றப்படி, சாலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இந்த புதிய ஜப்பான் டிராஃபிக் சிக்னல் டெக்னாலஜி சாலையில் வாகனங்களின் அடர்த்தியை கணக்கிட்டு, அதற்கேற்ப நேரத்தை செட் செய்து, சிக்னல்களை மாற்றும்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்பது மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்க வேண்டிய நேரமும் குறையும். இந்த டெக்னாலஜி ஜப்பானில் வெற்றிப் பெற்றதினாலேயே கடல்கடந்து தற்போது இந்தியா வரையில் வந்துள்ளது. நம் நாட்டில் தற்போதுள்ள டிராஃபிக் சிக்னல்களுக்கும் பல்வேறு கட்ட பகுப்பாய்வுகளுக்கு பின்னரே மெமரி ஸ்டோர் செய்யப்படுகிறது.

அதாவது உதாரணத்திற்கு, இந்த சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என 120இல் இருந்து சிக்னல் நேரம் ஓடும். அதுவே, சில இடங்களில் 80இல் இருந்து ஒவ்வொரு வினாடிகளாக குறைந்து சிக்னல் நிறம் மாறும். இருப்பினும், இது மனிதர்கள் மேனுவலாக நிர்ணயித்த நேர அளவு என்பதால், சில நேரங்களில் துல்லியமாக இருப்பதில்லை. ஆனால், இந்த ஜப்பான் டெக்னாலஜி ஆனது ஆட்டோமேட்டிக்காக செயல்படும்.

பெங்களூரில் ஜென்சிங்டன் சாலையில் தற்போதைக்கு தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே இந்த டிராஃபிக் சிக்னல் சிஸ்டம் செயல்படுத்தி பார்க்கப்பட உள்ளதாகவும், உண்மையான சோதனைகள் இந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே துவங்கவுள்ளதாகவும் பெங்களூர் நகர சாலை போக்குவரத்து துறை ஆணையர் தீபா சோழன் தெரிவித்துள்ளார். சோதனைகளுக்கு பின், அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து பொருத்தப்பட்ட 28 இடங்களிலும் இந்த டிராஃபிக் சிக்னல் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *