திருமணத்திற்கு சென்ற இடத்தில் சோகம்: டிராக்டர் மீது கார் மோதி விபத்து! 4 பேர் மரணம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்ற 4 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் விபத்து
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆந்திரா பதிவு எண் கொண்ட காரில் திருவண்ணாமலையிலிருந்து கீழ்பெண்ணாத்தூர் நோக்கி அழகன், பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகிய 4 பேரும் சென்று கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது திருமணத்திற்கு சென்றவர்களின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
டிராக்டர் ஓட்டி வந்த வள்ளிவாகை பகுதியை சேர்ந்த பூங்காவனம் என்ற நபர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் உடனடியாக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில் பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் பொலிஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த 4 பேர் விழுப்புரம் கஸ்கார்னி பகுதியை சேர்ந்த அழகன், அவலூர்பெட்டையை சேர்ந்த பாண்டியன், பிரகாஷ், சிரஞ்சீவி ஆகியோர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இவர்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கீழ்பெண்ணாத்தூருக்கு காரில் வந்தது தெரியவந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *