அதிகாலையில் சோகம்.. கேஸ் சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயம்!
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் ஐந்து வீடுகள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு பயலஹங்காவில் உள்ள பகதூர் சாஸ்திரி பேரங்காயில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அருகில் அந்த வீட்டின் செங்கற்சுவர் இடிந்து விழுந்தது. ‘
அத்துடன் அருகில் இருந்த மூன்று வீடுகள் உள்பட ஐந்து வீடுகள் சேதமடைந்தன. சிலிண்டர் வெடித்த போது வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து பசியா பானு(50), சல்மா(22), ஷாகித்(16), அஸ்மா(50), அப்ரோஸ்(23) உள்பட 6 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். அத்துடன் அவர்களை மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் வீடுகள் இடிந்த மக்கள், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் யலஹங்கா புதிய நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் படுகாயமடைந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.