அதிகாலையில் சோகம்… சென்னையில் பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்!

ன்று தை திருமகளை உலகம் முழுவதும் தமிழர்கள் வரவேற்கும் நிலையில், அதிகாலையிலேயே சோக நிகழ்வாக பிரபல மலையாள இசையமைப்பாளர் கே.ஜே.

ஜாய் காலமானார்.

தென்னிந்திய சினிமா திரையிசையில் பல புதுமைகளைப் புகுத்தியவர் இசை அமைப்பாளர் கே.ஜே.ஜாய். அவரது மறைவிற்கு மலையாள திரையுலகத்தினர் மட்டுமின்றி பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இசை அமைப்பாளர் கே.ஜே.ஜாய் (77) காலமானார். பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், படுக்கையாக இருந்த கே.ஜே.ஜாய், இன்று காலமானார்.

திருச்சூர் நெல்லிக்குன் பகுதியைச் சேர்ந்த கே.ஜே.ஜாய் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1975 ஆம் ஆண்டு ‘காதல் கடிதம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான கே.ஜே.ஜாய், மலையாளத்தின் முதல் டெக்னோ இசையமைப்பாளர் என்று வர்ணிக்கப்படுகிறார்.

எழுபதுகளில் தென்னிந்திய சினிமாவில் முதன் முதலில் மலையாள சினிமாவில் கீபோர்டை பயன்படுத்தியவர் என்ற பெருமை இவரையே சாரும். 12 ஹிந்தி படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

‘இவனேன் பிரியபுத்ரா’, ‘சந்தனசோழன்’, ‘ஆராதனா’, ‘சிநேகயமுனா’, ‘முக்குவனை நேசித்த பூதம்’, ‘மன்மிருகம்’, ‘சர்பா’, ‘சக்தி’ போன்ற பல மலையாளப் படங்களுக்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார். மேற்கத்திய பாணியில் ஜாய் இசையமைத்த மெல்லிசைகள் இன்றும் இசை ஆர்வலர்களால் போற்றப்படுகின்றன. அனுபல்லவியின் என்ஸ்வரம் பூவிட்டும் கானமே, ஏய் எக்கே ஏறி இகேரா சித்னாலே ஹின்னாலே, மனித மிருகத்தின் கஸ்தூரி மிழி, பாம்பின் செலோத்த கண்ணாலே போன்ற பாடல்கள் ஒரு தலைமுறையையே மெய்சிலிர்க்க வைத்தன. 1994-ல் பி.ஜி.விஸ்வம்பரன் இயக்கிய ‘தாதா’தான் இவரின் கடைசிப் படம். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *