பொங்கல் கொண்டாட்டத்தில் விபரீதம்.. பி.டி டீச்சரின் தலையை வெட்டிய மர்ம நபர்..!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த திருவக்குளம் சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வேலு, இவரது மகன் அருண்பாண்டியன் (28). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு நடக்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் மற்றும் துரை மகன் செந்தில் (43) மற்றும் சிலர் கும்பலாக அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அருண்பாண்டியனை கத்தியால் வெட்ட முயன்றார்.
இந்த கொலை குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அருண்பாண்டியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததால், அது தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரத்தில் உடற்கல்வி ஆசிரியர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.