பிரித்தானியாவில் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்: நீதிமன்றம் வழங்கியுள்ள அதிகபட்ச தண்டனை
பிரித்தானியாவில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் இரண்டு டீன் ஏஜ் சிறுவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறுவனுக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 டீன் ஏஜ் சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு நவம்பரில் கோர்டன் கோல்ட்(Gordon Gault) என்ற 14 வயது சிறுவன் Newcastle’s West End பகுதியில் தன்னுடைய நண்பர் ஒருவரின் மின்சார இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கத்தியால் குத்தப்பட்டு 6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இரண்டு போட்டி கும்பல்களுக்கு நடுவே இருந்த மோதலுக்கு நடுவே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
9 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இந்நிலையில் Newcastle கிரவுன் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில், கிரேட்டர் மான்செஸ்டரின் சால்போர்ட் பகுதியை சேர்ந்த 18 வயது கார்லோஸ் நெட்டோ(Carlos Neto) மற்றும் Newcastle-லின் நியூபிக்கின் ஹால் பகுதியை சேர்ந்த 18 வயது லாசன் நாட்டி (Lawson Natty) என்ற இரண்டு டீன் ஏஜ் சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.
நீதிபதி மார்ட்டின் ஸ்பென்சர்(Martin Spencer) முதல் குற்றவாளியான கார்லோஸ் நெட்டோ-க்கு (Carlos Neto) 9 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனையும், பெல்ஜியத்தில் பிறந்த லாசன் நாட்டி-க்கு (Lawson Natty) 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் நாடு கடதப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.