கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட விபரீதம்: எம்.எல்.ஏ. மருத்துவமனையில் சிகிச்சை!
ஒடிசா, நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் பூபேந்திர சிங் (வயது 72). இவர், அதே தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
எம்.எல்.ஏ பூபேந்திர சிங் கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்த பிறகு சற்று நேரம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பூபேந்திர சிங் தலை மீது எதிர்பாராத விதமாக பந்து பலமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பூபேந்திர சிங் மைதானத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக எம்.எல்.ஏ பூபேந்திர சிங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
ஆண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.