‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’.
பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது
“இயக்குநர் விஜய் என்னுடைய வீட்டில் ஒருவர் போலதான். அவருடன் நான் பத்து படங்கள் வேலை செய்துவிட்டேன். என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து பல ஹிட் பாடல்கள் விஜயின் படங்களில்தான் அமைந்தது. எங்கள் காம்பினேஷனில் முத்துகுமார் சாரை மிஸ் செய்கிறோம். அருண் விஜய் சாருடன் ‘யானை’, ‘மிஷன் சாப்டர் 1’, அடுத்து பாலா சார் படம் எனத் தொடர்ந்து மூன்று படங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படம் படக்குழுவுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இந்தப் பொங்கலுக்கு ‘கேப்டன் மில்லர்’, ‘மிஷன் சாப்டர்1’ என நான் இசையமைத்த எனது இரண்டு படங்களும் வருகிறது” என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் ருச்சி, “படக்குழுவினர் அனைவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தார்கள். எனக்கு இந்தப் படம் அற்புதமான பயணமாக இருந்தது”.
படத்தொகுப்பாளர் ஆண்டனி
, “படத்தில் அருண் விஜய் கலக்கி இருக்கிறார். இயக்குநர் விஜயின் மற்றப் படங்களைப் போலவே, இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப் பெறும்”.