குரு பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம், வெற்றி… இந்த ராசிகளுக்கு குரு அருள், ராஜயோகம்
Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. குரு பகவான் மிகவும் சுபமான கிராமமாக பார்க்கப்படுகிறார். ஆகையால் இவரது பெயர்ச்சி மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 2024, மே ஒன்றாம் தேதி மதியம் அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இப்போது குரு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இருக்கிறார்.
மே மாதம் குரு பகவான் ரிஷபத்தில் பெயர்ச்சி ஆவார். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனும் குருவும் எதிரி கிரகங்களாக பார்க்கப்படுகின்றன. குரு பகவானின் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் பலவிதம் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு சுப விளைவுகளும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். எனினும் குரு பெயர்ச்சியால் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படவுள்ளன. நீண்ட நாட்களாக இவர்கள் காத்திருந்த நல்ல செய்தி இந்த காலத்தில் வந்து சேரும். பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள்.
திருமண வாழ்க்கை, செல்வம், ஆன்மீக சிந்தனைகள், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக குரு பகவான் உள்ளார். அவரது பெயர்ச்சி மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மே மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சுபமானதாக பார்க்கப்படுகின்றது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். சேமிப்பும் அதிகமாகும். இந்த காலத்தில் நீங்கள் கூறும் அனைத்தையும் உங்களை சுற்றி இருப்பவர்கள் கேட்டு அதன்படி நடப்பார்கள். இதன் காரணமாக நண்பர்கள் வட்டத்திலும் உறவினர்கள் வட்டத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு இது மிகவும் லாபகரமான நேரமாக இருக்கும். வீட்டில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. குழந்தை வரம் வேண்டி உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேஷ ராசியில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமாக இருக்கவுள்ளது. உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். ஆய்வு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகள் குவியும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். உங்கள் குழந்தைகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். அவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதலும் அன்பும் அதிகமாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வரவும், ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளவும் இப்பொழுது வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி உத்தமமாக இருக்கும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். குரு பகவான் உங்கள் பாதையில் வரும் அனைத்து தடைகளையும் அகற்றி உங்களை வெற்றி அடையச் செய்வார். வியாபாரம் தொடர்பாக உங்களுக்கு உள்ள திட்டங்கள் சீக்கிரமாக செயல்படுத்தப்படும். பல்வேறு துறைகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் வருமானமும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமை மேலோங்கும். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் உறவுகள் நன்றாக இருக்கும்.
மகரம் (Capricorn)
குரு பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மேல்படிப்பிற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும்.