சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம், பண மழை பொழியும்
Venus Transit: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, கல்வி, வளமை, வாகனங்கள், பேச்சாற்றல், அறிவுத்திறன் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் தன் ராசியை மாற்றவுள்ளார். சிவராத்திரிக்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 7 ஆம் தேதி கும்ப ராசியில் அவர் பெயர்ச்சியாக உள்ளார். தற்போது மகர ராசியில் இருக்கும் சுக்கிரன் கும்ப ராசியில் நுழைவார். அதன் பிறகு மாதத்தின் கடைசியில் கும்ப ராசியில் இருந்து அவர் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
மார்ச் மாதம் நடக்க உள்ள சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் மகிழ்ச்சியின் உச்சம் தொடுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பரிபூரணமான பலன் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலையும் மேம்படும். வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
மிதுனம் (Gemini)
சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தரும். இவர்களது நிதிநிலை மேம்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் இருக்கும் சுக்கிர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சுக்கிரன் மற்றும் லட்சுமி அன்னையின் அருளால் பொருளாதார நிலை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.
துலாம் (Libra)
துலா ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். லாபம் அதிகரிக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். முன்னர் செய்திருந்த முதலீடுகளால் இப்போது லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். உங்கள் நிதிநிலை நன்றாக இருக்கும். நிலம் வாங்கும் யோகம் இப்போது உள்ளது. புதிய வாகனங்களையும் நீங்கள் வாங்க கூடும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும், அலுவலகத்தில் பணிபுரியும் சூழல் நன்றாக இருக்கும்.
மீனம் (Pisces)
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகளால் தற்போது லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்பி கிடைக்கும். சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.