வக்ர பெயர்ச்சி அடையும் புதன்… இந்த ராசிகளுக்கு அமோக வாழ்க்கை!

கிரகங்களின் இளவரசன் என்றும், ஞானத்தை அளிக்கும் கடவுள் என்றும் அழைக்கப்படும் புதன், பெயர்ச்சியாகும் போதும், வக்ரப் பெயர்ச்சி (Mercury Retrograde Transit) ஆகும் போதும், உதயமாகும் போதும், அஸ்தமனம் ஆகும் போதும், அனைத்து ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில், 2024, ஏப்ரல் இரண்டாம் தேதி, அதிகாலை 3: 18 மணிக்கு, மேஷ ராசியில், வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
புதனின் வக்ர நிலை
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். இந்நிலையில் மேஷ ராசியில் புதன் வக்ர நிலை அடைவது, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை கொடுக்கும். இந்நிலையில், புதனின் வக்ரப் பெயர்ச்சியினால், எந்த ராசிகள் சிறப்பான பலன்களை பெற்று, அமோகமான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி (Leo Zodiac)
சிம்ம ராசியில், புதன் ஒன்பதாம் வீட்டில் வக்கிரநிலையை அடைகிறார். இதனால் வேலையில் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரலாம். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்து கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மீகம் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தனுசு ராசி (Sagittarius Zodiac)
தனுசு ராசியில், புதன் ஏழாவது வீட்டில் வக்கிர நிலை அடைகிறார். இதனால் இந்த ராசிகள் வேலையில் தொழிலில், நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் ஆதாயமும் ஏற்படும். எனினும் வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையால் உங்கள் திறமையை நிரூபித்து, அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்ப ராசி (Aquarius Zodiac)
கும்ப ராசியின் ஐந்தாம் வீட்டில், புதன் வக்ர நிலை அடைவதால், வேலையில் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். சம்பள உயர்வு பதவி உயர்வு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் கைகூடிவரும் வாய்ப்பு உண்டு. எதிர்பாராமல் வரும் பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.