புத்தாண்டுக்கு சுற்றுலா செல்கிறீர்களா? – உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
2023-ஆம் ஆண்டின் இறுதி நாட்கள் நெருங்கி விட்டன. இன்னும் சில தினங்களில் புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது. அதிலும் டிசம்பர் 30, 31 தொடங்கி புத்தாண்டு நாள் வரையிலும் நீண்ட வார இறுதியை கொண்ட விடுமுறைக் காலமாகவும் இது அமைந்துள்ளது. இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நண்பர்களுடன் சர்வதேச சுற்றுலா செல்வதற்கு நீங்கள் திட்டமிடலாம்.
அதிலும் தாய்லாந்து, மலேசியா, இலங்கை போன்ற சுற்றுலாவை மையமாகக் கொண்ட நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு நமக்கு இன்னும் பலன் தரக் கூடியதாக அமையும். இவ்வாறான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நாம் சுற்றுலா செல்லும்போது, ஓரிரு நாட்களுக்காக அந்நாட்டின் சிம் கார்டுகளை நாம் வாங்க முடியாது.
அதே சமயம், ஏர்டெல், வோடோஃபோன் போன்ற சேவைகளை நாம் பயன்படுத்துபவர் என்றால் சர்வதேச ரோமிங் சேவைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஃபோன் அழைப்புகளை மேற்கொள்ளவும், மெசேஜ் செய்யவும் இது உதவிகரமாக இருக்கும் மற்றும் இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி நேவிகேஷன் செயலிகளை பயன்படுத்தும்போது நம்முடைய சுற்றுலா அனுபவம் எளிமையானதாக மாறும்.
ஏர்டெல் ரோமிங் திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் ரூ.755க்கு ரோமிங் திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 5 நாட்கள் ஆகும். இதில் ஒரு ஜிபி டேட்டா கிடைக்கும்.
ரூ.899க்கு ரீசார்ஜ் செய்தால் 10 தினங்கள் வேலிடிட்டி கொண்ட ரோமிங் திட்டத்தைப் பெறலாம். இதில் 1 ஜிபி டேட்டா 30 நாள் வேலிடிட்டியை கொண்டதாகவும், 5 ஜிபி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியை கொண்டதாகவும், 1 ஜிபி டேட்டா 7 நாட்கள் வேலிடிட்டியை கொண்டதாகவும் வழங்கப்படுகிறது. இது தவிர 20 எஸ்.எம்.எஸ்., 100 நிமிடங்களுக்கு அழைப்பு போன்ற வசதிகளைப் பெறலாம்.
ரூ.2998க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பெறலாம். இதில் 200 நிமிடங்கள் அழைப்பு, 20 எஸ்.எம்.எஸ். ஆகிய வசதிகள் கிடைக்கும்.
வோடஃபோன் ஐடியா திட்டங்கள் :
ரூ.695க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் வேலிடிட்டியுடன் ஒரு ஜிபி டேட்டா, 120 நிமிட அழைப்பு, அளவற்ற இன்கம்மிங் அழைப்புகள் போன்றவற்றை பெறலாம்.
அதேபோல ரூ.3,495க்கு ரீசார்ஜ் செய்தால் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் 7 ஜிபி டேட்டா பெறலாம். இதில் அளவற்ற இன்கம்மிங் அழைப்புகள், 120 நிமிட அவுட்கோயிங் அழைப்புகள் ஆகிய வசதிகளை பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் :
ரூ.575க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாள் வேலிடிட்டி 250 எம்பி டேட்டா, 100 நிமிட அவுட்கோயிங் அழைப்புகள், அளவற்ற இன்கம்மிங் அழைப்புகள் ஆகியவற்றை பெறலாம்.
ரூ.2,875க்கு ரீசார்ஜ் செய்தால் 250 எம்பி டேட்டா, அளவற்ற இன்கம்மிங் அழைப்புகள் ஆகியவற்றை 7 நாட்களுக்குப் பெற முடியும்.
ஜியோ வழங்கும் ரூ.5,751 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 5 ஜிபி டேட்டா, அளவற்ற இன்கம்மிங் அழைப்புகள், 1500 நிமிட அவுட்கோயிங் அழைப்புகள், 1500 எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை பெறலாம்.