நேபாளம், பூடானுக்குச் சுற்றுலா செல்கிறீர்களா? ஆதார் கார்டு வேண்டாம்.. இவை இருந்தால் போதும்
இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் பூடான் மற்றும் நேபாள நாடுகளில் இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் இங்கு வருடம்தோறும் வருகை தருகிறார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து பலரும் இந்த இரு நாடுகளுக்கும் சுற்றுலா செல்கிறார்கள். எந்தவொரு சர்வதேச நாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றாலும் விசா, பாஸ்போர்ட் ஆகியவை தேவைப்படும். ஆனால் இந்திய குடிமக்கள் பூடான் மற்றும் நேபாள நாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், இவை எதுவும் தேவையில்லை. அதேப்போல் இதே சலுகையை இந்தியாவும் இந்த இரண்டு நாட்டு மக்களுக்கும் தந்துள்ளது. இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையேயுள்ள நட்புறவு மேம்படுவதோடு சுற்றுலாவும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இந்திய எல்லைகளின் பாதுகாப்பிற்கும் இது உதவியாக இருக்கும். இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக கருதப்பட்டாலும் நேபாளம் மற்றும் பூடானில் நுழைவதற்கு இதை முக்கியமான அடையாள அட்டையாக கருதுவதில்லை. அப்படியென்றால், நேபாளம் மற்றும் பூடான் நாட்டிற்குச் செல்லும் இந்தியர்கள் அடையாளச் சான்றாக எந்த சான்றிதழை கொண்டுச் செல்ல வேண்டும்?
பூடான் மற்றும் நேபாள நாட்டில் நுழைவதற்கு ஆதார் கார்டு ஏற்றுக்கொள்ப்படுவதில்லை என 2017-ம் ஆண்டிலேயே இந்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. அதற்குப் பதிலாக 15 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த இரு நாடுகளுக்கும் பயணம் செய்கையில் வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை அடையாளச் சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்