TRB ராஜா: தமிழ்நாட்டுக்கு 3 குட் நியூஸ்! HCL ரோஷ்னி நாடார் உடன் சந்திப்பு, அப்போ அது நடக்க போகுதா?!
சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டிற்கு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி வெற்றி பாதைக்கு அடித்தளமிட்ட நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்து வரும் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு (WEF) அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு கலந்துகொண்டு அசத்தி வருகிறது.
Davos World Economic Forum என்பது இந்தியாவில் இருந்து மட்டும் அல்லாமல் உலகளவில் இருந்து வணிகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை வருடத்திற்கு ஒருமுறை ஒன்றிணையும் முக்கியமான வர்த்தகக் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் மத்தியில் தமிழ்நாட்டை முக்கிய முதலீட்டுத் தளமாகக் காட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
16 ஆம் தேதி டாவோஸ்-ல் Tamil Nadu Pavilion-ஐ தொழிற்துறை அமைச்சர் திறந்து வைத்ததில் துவங்கி 24 மணிநேரத்தில் 20 முக்கியக் கூட்டங்கள் நடந்துள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.அமைச்சர் டிஆர்பி ராஜா டாவோஸ் பயணத்தில் தமிழ்நாடு பெவிலியனில் HCL டெக்னாலஜிஸ் தலைவர் ரோஷ்னி நாடார் மற்றும் HCL டெக்னாலஜிஸ் CEO சி.விஜயகுமார் ஆகியோரை சந்தித்தார்.
ரோஷ்னி நாடார் மற்றும் சி.விஜயகுமார் ஆகியோரிடம் அமைச்சர், தமிழ்நாட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தங்கள் அலுவலகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்தார்.இந்த நிலையில் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டாவோஸ் கூட்டம் குறித்துச் சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் 3 முக்கியமான திட்டம் குறித்துப் பேசியது தான் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டிற்கு (WEF) அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான தொழில் துறையினர் குழு கலந்துகொண்டதில் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் பேட்டியில் அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன 3 முக்கிய விஷயங்கள்.1. தமிழ்நாட்டுக்கு செமிகண்டக்டர் துறையில் (ஃபேப்ரிகேஷன் மற்றும் டிசைன்) விரைவில் சில குட் நியூஸ் வர உள்ளது எனத் தெரிவித்தார்.2. தமிழ்நாட்டில் லைப் சையின்ஸ் துறையில் புதிய வர்த்தகத்தையும், முதலீட்டையும் ஈர்க்க முயற்சிகள் இந்த டாவோஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.