போக்குவரத்து ஊழியர்கள் உடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை – பிப்.7ல் ஏற்பாடு!
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்குதல், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி போன்ற 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கடந்த ஜன. 9, 10 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் வேலை நிறுத்தத்தை ஜன. 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப். 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளனர்.