Trisha – பல வருடங்களுக்கு பிறகு மூத்த நடிகருக்கு ஜோடி சேர்ந்த திரிஷா.. குதிரையேற்ற பயிற்சியில் பிஸி
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் கைகளில் இப்போது விடாமுயற்சி, தக் லைஃப், கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளன.
அதேபோல் ஹிந்தியிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருப்பதாகவும் புதிய தகவல் கடந்த சில வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது சிரஞ்சீவியுடனும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமானவர் திரிஷா. அதன் பிறகு ஜோடி படத்தில் ஒரு சில சீன்களில் தலை காண்பித்த அவருக்கு லேசா லேசா படத்தின் மூலம் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே மௌனம் பேசியதே படத்தில் நடித்து அந்தப் படம் ரிலீஸாகிவிட்டது.
இதன் காரணமாக மௌனம் பேசியதே படம் அவருடைய முதல் படம் என்று கருதப்படுகிறது. அப்படத்திலேயே திரிஷாவின் அழகு, நடிப்பு ஆகியவை ரசிகர்களையும் கோலிவுட்டினைரையும் கவர்ந்தன.