Trisha – காதலில் விழுந்துவிட்டாரா திரிஷா?.. காதலர் தினத்தில் கொடுத்த சிக்னல்?.. செம போஸ்
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது.
படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா.
தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 40 வயதாகும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர்.
முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.