Trisha – காதலில் விழுந்துவிட்டாரா திரிஷா?.. காதலர் தினத்தில் கொடுத்த சிக்னல்?.. செம போஸ்
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 40 வயதாகும் திரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.
தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்றும்; அதில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நயனும் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்திருப்பதால் திரிஷா காட்டில் அடைமழை என்று திரைத்துறையை சேர்ந்தவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
நோ திருமணம்: திரிஷாவுக்கு இப்போடு 40 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. வருண் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவில்லை. அதனையடுத்து தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை அவர் காதலித்து வந்ததாகவும்; ஆனால் ராணாவின் குடும்பம் கொடுத்த அழுத்தத்தால் அவர்களது காதல் பாதியில் முடிந்துவிட்டதாகவும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தொடர்ந்து பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
காதலில் இருக்கிறாரா திரிஷா?: இந்நிலையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. சில நடிகைகள் தங்களது காதலரை நேற்று அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் திரிஷாவோ ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். கையில் ரோஜா பூங்கொத்துடன் இருக்கும்படியான புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள், தான் காதலில் இருக்கிறேன் என்கிற சிக்னலை ரோஜா பூங்கொத்து ஃபோட்டோ மூலம் திரிஷா உணர்த்துகிறாரோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். மேலும் திரிஷா காதலில் இருப்பது உண்மை என்றால் விரைவில் காதலரை அறிமுகம் செய்யுங்கள் மேடம் என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.