இந்தியாவில் டிரையம்ப் டேடோனா 660 பைக்கின் அறிமுக விபரம்
டிரையம்ப் வெளியிட்ட ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 (Triumph Daytona 660) பைக்கின் முக்கிய விபரங்களை தனது இந்திய இணையதள பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்படலாம்.
டிரையம்ப் வெளியிட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், பரவலாக தனது பிரீமியம் மாடல்களின் எண்ணிக்கையை இந்திய சந்தையில் உயர்த்தி வருகின்றது. சமீபத்தில் ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்ட டேடோனாவின் 660 விலை EUR 10,045 (தோராயமாக Rs. 8.98 லட்சம் ) அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைக்கு வரும் பொழுது ரூ.10 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கின்றோம்.
புதிய ஸ்போர்ட்டிவ் டிரையம்ப் டேடோனா 660 மாடலில் 660cc மூன்று சிலிண்டர் இயந்திரம் அதிகபட்சமாக 11,250rpmல் 95bhp மற்றும் 8,250rpmல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான சவாரி முறைகளுடன் வருகிறது.
மிக நேர்த்தியான ஃபேரிங் பேனல்கள் சேர்க்கப்பட்டு வெள்ளை உடன் கருப்பு, கிரானைட் உடன் கருப்பு மற்றும் சிவப்பு உடன் கருப்பு என மூன்று நிறங்களை பெற்று 110 மிமீ பயணிக்கின்ற 41 மிமீ ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்றது.
பிரேக்கிங் அமைப்பில் முன்புற டயருக்கு இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 ZR 17 முன் மற்றும் 180/55 ZR 17 பின்புற டயரை பெற்று 17 அங்குல அலாய் கொண்டுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள் புதிய டிரையம்ப் டேடோனாவின் 660 விலை அறிவிக்கப்பட உள்ளது.