டிரையம்ப் டேடோனா 660 அறிமுகம்., இந்தியா வருமா ?
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பேரிங் ஸ்டைல் பெற்ற புதிய டேடோனா 660 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே சந்தையில் உள்ள ட்ரைடென்ட் 660 அடிப்படையில் என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துகின்ற ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 இங்கிலாந்து சந்தையில் 8,595 பவுண்ட் (ரூ. 9.09 லட்சம்) ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
Triumph Daytona 660
புதிதாக வந்துள்ள ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் பேனல் பெற்ற டிரையம்ப் டேடோனா 660 பைக்கில் உள்ள இன்லைன் மூன்று சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 11,250rpmல் 95bhp மற்றும் 8,250rpmல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் ரெட்லைன் 12,650rpm ஆக உறுதிப்படுத்துப்பட்டுளது. கூடுதலாக பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான சவாரி முறைகளுடன் வருகிறது.
குறிப்பாக சந்தையில் உள்ள 660சிசி மாடல்களை விட 14hp மற்றும் 4Nm கூடுதல் பெர்ஃபாமென்ஸை புதிய மாடல் வெளிப்படுத்துகின்றது.
டேடோனா 660 மாடலில் ஷோவா 41 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் மற்றும் ப்ரீ லோட் ஷோவா மோனோஷாக் கொண்டதாக விளங்குகின்றது, பிரேக்கிங் முறையில் முன்புற டயருக்கு இரட்டை 310 மிமீ டிஸ்க்குகள் மற்றும் ஒற்றை 220 மிமீ டிஸ்க் பின்புறத்தில் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும், 120/70 முன் மற்றும் 180/55 பின்புற டயரை பெற்று 17 அங்குல அலாய் கொண்டுள்ளது.
மற்றபடி டேடோனாவில் டிராக்ஷன் கண்ட்ரோல் முழுமையான எல்இடி ஹெட்லைட் ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய TFTயையும் பெறுகின்றது. 2024 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.