இயேசுவை தன்னுடன் ஒப்பிட்டு பேசிய டிரம்ப்! Porn நடிகைக்கு 130,000 டொலர்கள் செலுத்திய விவகாரத்தில் காலக்கெடு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தன்னை இயேசுவுடன் ஒப்பிட்டு கருத்து கூறினார்.

குற்றவியல் வழக்கு
Porn நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு (Stormy Daniels) பணம் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (Donald Trump) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர் 130,000 டொலர்கள் வழங்கியதாக கூறப்படும் இவ்வழக்கில் 454 மில்லியன் டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் காலக்கெடு விதிக்கப்பட்டது.

நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா, வங்கிகள் மற்றும் காப்பீட்டாளர்களுக்கு ஒப்பந்தங்கள் மற்றும் கடன்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் தனது நிகர மதிப்பை பில்லியன் கணக்கான டொலர்களால் அதிகரிக்க சதி செய்ததாக குற்றம்சாட்டினார்.

எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை
ஆனால், தன்னை அரசியல் நோக்கங்களுக்காக ஜேம்ஸ் குறிவைத்ததாகவும், எந்த தவறான செயலிலும் தான் ஈடுபடவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும் அவர் Truth Social பதிவில் தன்னை இயேசுவோடு ஒப்பிட்டு, பைபிள் வசனத்தின் உரையை பகிர்ந்துள்ளார்.

அதில், ”அவர்களும் என்னை வெறுப்பு வார்த்தைகளால் சூழ்ந்து கொண்டார்கள், காரணமின்றி என்னை எதிர்த்துப் போராடினார்கள். என் அன்பிற்கு ஈடாக அவர்கள் என் மீது குற்றம்சாட்டுகிறார்கள், ஆனால் நான் பிரார்த்தனைக்கு என்னை கொடுக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *