வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் திரும்புவது காலத்தின் கட்டாயம்: முன்னாள் பிரித்தானிய பிரதமர்
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்புவது காலத்தின் கட்டாயமாக இருக்கலாம் என்று போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பைடனை விடவும் மக்கள் ஆதரவு
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவதுடன், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை விடவும் மக்கள் ஆதரவும் அவருக்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை குறிப்பிட்டு ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரம்ப் உக்ரைனை ஆதரிப்பார் என்றால், அவரது தலைமை உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்றும் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான தனது உறவைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ளும் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தற்போது ஜோ பைடன் அளிக்கும் நிபந்தனையற்ற ஆதரவு உக்ரைனுக்கு கிடைக்குமா என்பது தொடர்பில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.
முடித்து வைப்பது தான் முறை
நேட்டோ மீது கடும் விமர்சனம் முன்வைத்துள்ள ட்ரம்ப், தாம் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.