மணக்க மணக்க வறுத்த மீன் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாக மீன் குழம்பு என்றால் எல்லோரும் மிகவம் வரும்பி உண்பார்கள். மீனில் செய்த உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது.
சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்டலையில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மீன் கறிகளை பல வகைகளில் சுவையாகவும் சுலபமாகவும் செய்து விடலாம்.
அந்த வகையில் இன்று மிகவும் வித்தியாசமான முறையில் வறுத்த மீன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் – 5 துண்டுகள்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சி – அரை தேக்கரண்டி
பூண்டு – அரை தேக்கரண்டி
தக்காளி – 2
தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
புளிக்கரைகல் – 2 தேக்கரண்டி
தூள் வெல்லம் – அரை தேக்கரண்டி
செய்யும் முறை
முதலில் மீன் துண்டுகளை உப்பு , மஞ்சள் ,மிளகாய் தூள் இவை மூன்றையும் மீனில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணை ஊற்றி ஊறவைத்த மீன் துண்டுகளை பொரித்து எடுக்க வேண்டும்.
பின்னர் அதே கடாயில் கடுகு, வெந்தயம், சோம்பு ,சீரகம் ,வெங்காயம் ,இஞ்சி ,தட்டிய பூண்டு இவை அனைத்தையும் வெங்காயம் பொன்னிறத்தில் வரும் வரை நன்றாக தாழிக்க வேண்டும்.
இதற்கு பின்னர் பேஸ்ட் செய்த தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியாத்துள் ,உப்பு இதை எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியதும் கரைத்த புளிக்கரைசலை சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடியால் மூடி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இதன் பின்னர் வறுத்து வைத்த மீனை அதில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். இதற்கு பின்னர் கடைசியாக வெல்லத்தை சேர்த்து மல்லி இலைகளையும் சேர்த்து இறக்கி பரிமாறலாம்.