சுவையான மீல் மேக்கர் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து பாருங்க.!

பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் சைவ பிரியர்களுக்கு இது மிகவும் விருப்பமான உணவுகளில் ஒன்று என்றே சொல்லலாம். நடு இரவில் எழுப்பி கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.

ஆனால் சைவ பிரியர்களுக்கு.? அவர்களுக்கும் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, பன்னீர் பிரியாணி, சோயா பிரியாணி என பல வகைகள் உள்ளன.

அதன்படி இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியானது மீல் மேக்கர் வைத்து எப்படி எளிதான செய்முறையில் பிரியாணி செய்யலாம் என்று தான்…

தேவையான பொருட்கள்:

மசாலா அரைப்பதற்கு தேவையானவை :

இஞ்சி – 1

பூண்டு – 4 பல்

பச்சை மிளகாய் – 2

கிராம்பு – 2

இலவங்கப்பட்டை – 1

ஏலக்காய் – 2

மரினேட் செய்ய தேவையானவை :

சோயா சங்க் (மீல் மேக்கர்) – 2 கப்

தயிர் – 1/4 கப்

அரைத்த மசாலா

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

பிரியாணி செய்ய தேவையானவை :

பாஸ்மதி அரிசி – 2 கப்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி – 2

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

நெய் – 3 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

பிரியாணி இலை – 2

இலவங்கப்பட்டை – 1

ஏலக்காய் – 2

கிராம்பு – 2

அரைத்த மசாலா

புதினா இலை – 1 1/2 கைப்பிடி

கொத்தமல்லி இலை – 1 1/2 கைப்பிடி

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக அலசி 30 நிமிடங்களுக்கு அதை ஊறவைத்து கொள்ளுங்கள்.

பிறகு மீல் மேக்கரை சுடுதண்ணீரில் 10 நிமிடங்களுக்கு நன்றாக ஊறவைத்து தண்ணீரை முழுவதுமாக பிழிந்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மசாலா அரைக்க எடுத்து வைத்துள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

தற்போது ஒரு கிண்ணத்தில் உறவைத்த மீல் மேக்கரைசேர்த்து அதனுடன் அரைத்த மசாலாவில் பாதியளவு, மிளகாய் தூள், தயிர் கரம் மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் குக்கரை வைத்து அதில் 2 டீஸ்பூன் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு கலந்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அதனுடன் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் அரைத்து வைத்துள்ள மீதி மசாலா, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்றாக கலந்து வதக்கி கொள்ளவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மாசா சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

பிறகு அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

தக்காளி நன்றாக மென்மையாக வதங்கியவுடன் மரினேட் செய்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.

அடுத்து உறவைத்த 2 கப் பாஸ்மதி அரிசியை மீல் மேக்கருடன் சேர்த்து அதனுடன் ஒரு கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு குக்கரை மூடி மிதிகமான தீயில் ஒரு விசில் விடவும்.

குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து பார்த்தால் சுட சுட சுவையான மீல் மேக்கர் பிரியாணி தயாராக இருக்கும்.

இதை நீங்கள் வெங்காய பச்சடியுடன் சேர்த்து சாப்பிட்டு ருசியுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *