இறால் கிரேவியை இப்படி செய்து பாருங்க… ருசி அள்ளும்.!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் உணவுகளில் ஒன்று இறால். இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய இறால் பெரிதும் பயன்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

ஒருமுறை தேங்காய் பால் சேர்த்து இங்கே குறிப்பிட்டுள்ள செய்முறையில் இறால் கிரேவியை செய்து பாருங்கள் அதன் சுவை அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

இறால் – 500 கிராம்

கெட்டியான தேங்காய் பால் – 3 டீஸ்பூன்

தண்ணீர் கலந்த தேங்காய் பால் – 1 கப்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

காய்ந்த மிளகாய் – 3

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 3/4 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் தூள் – 1/2 தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

கடுகு விதைகள் – 3/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 10- 15 இலைகள்

கொத்தமல்லி இலைகள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 2-3 டீஸ்பூன்

உப்பு – 1 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் இறாலை சுத்தம் செய்து நன்றாக அலசி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்து அதன் பாலை நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கெட்டியான தேங்காய் பாலில் இருந்து மூன்று டீஸ்பூன் எடுத்து தனியாக வைத்துவிட்டு மற்றதை ஒரு கப் வரும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிந்ததும் பாதியாக நறுக்கிய காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து தீயை குறைத்து 5 நிமிடங்களுக்கு அதன் நிறம் மாறும்வரை நன்கு வதக்கவும்.

பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை சுமார் 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் வதக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து குறைந்த வெப்பத்தில் சுமார் 2 நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கருப்பு மிளகு தூள், பெருஞ்சீரகம் தூள், சீராக பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக மசாலாக்களின் பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கிக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் இறாலை சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.

அடுத்து அதில் வடிகட்டி வைத்துள்ள ஒரு கப் தேங்காய் பால் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து மூடி 3 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.

பிறகு மூடியை அகற்றி அதில் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்.

கடைசியாக அதில் எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து 2 நிமிடம் கழித்து இறக்கினால் சூடான தேங்காய் பால் சேர்த்த இறால் கிரேவி ரெடி.

இந்த சுவையான இறால் கிரேவியை நீங்கள் சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்…

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *