சுவையான ”பீர்க்கங்காய் முட்டை கறி” ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!
பீர்க்கங்காய் சாப்பிடும் பொழுது நீர்ச்சத்து அதிகரிக்கும். சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும். பீர்க்கங்காய் உடன் முட்டை சேர்த்து செய்யும் பீர்க்கங்காய் முட்டை கறி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய்
வெங்காயம்
முட்டை
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
எண்ணெய்
கடுகு
செய்முறை:
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் மிளகாய், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பீர்க்கங்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பீர்க்கங்காயை நன்றாக வேக வைக்கவும். பீர்க்கங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி மூடி வைத்து வேக விடவும்.
5 நிமிடம் கழித்து மீண்டும் முட்டை மற்றும் பீர்க்கங்காயை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் முட்டை கறி தயார்.