வாழைப்பழம் கெட்டுபோகாமல் இருக்க இந்த ட்ரிக்கை ட்ரை பண்ணுங்க!!
பொதுவாகவே, நாம் எழுதுவதற்கு தான் பேனாவைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பேனாவின் தனித்துவமான பயன்பாட்டை குறித்து உங்களுக்கு தெரியுமா..? ஆம், இதை நாம் எழுதுவதற்கு மட்டுமின்றி, வாழைப்பழம் கெட்டு போகாமல் இருக்கவும் உதவுகிறது. இது கேட்பதற்கு உங்களை ஆச்சரியமடைய வைக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இது குறித்த வீடியோ ஒன்றை இல்லத்தரசி ஒருவர் வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேனாவும் வாழைப்பழமும் போல ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லை நம் அனைவரும் தெரியும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தும் போது வாழைப்பழம் சீக்கிரம் கெட்டு போகாமல் இருக்கும். ஒருமுறை இதை நீங்கள் செய்தால் மீண்டும் மீண்டும் அதை செய்ய விரும்புவீர்கள். சரி இப்போது அதை எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வீடியோவில், அந்த பெண் முதலில் வாழைப்பழங்களை எடுத்து கொள்கிறார். பின்னர் சில பேனாவை எடுத்து இரண்டு வாழைப்பழங்களுக்கு இடையே வைத்து ஒரு கயிற்றை கொண்டு அதை கட்டுகிறாள். இப்போது இந்த வாழைப்பழத்தை உங்கள் வீட்டில் எங்கு தொங்க விட முடியுமோ அங்கு தொங்க விடுங்கள்.இதனால் என்ன பலன் என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். ஆனால் பலன்கள் இருக்கு.
எப்படியெனில், நீங்கள் கடையில் இருந்து வாங்கிய முதல் நாள் வாழைப்பழம் நன்றாக தான் இருக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது கெட்டுப் போக ஆரம்பிக்கும். அது சாப்பிட முடியாதா அளவிற்கு அதன் தன்மையை இழப்பதால் நாம் அதை குப்பையில் போடுகிறோம். வாழைப்பழங்களை நாம் வாங்கி சும்மா அப்படியே வைப்பதால் அவற்றின் மீது அழுத்தம் ஏற்பட்டு, கீழே உள்ள வாழைப்பழங்கள் மோசமடையத் தொடங்குகிறது. எனவே வாழைப்பழம் வைக்கும் முறையை முதலில் மாற்றுங்கள்.
வாழைப்பழத்தை சும்மா அப்படியே வைப்பதற்குப் பதிலாக, பேனா உதவியுடன் தொங்கவிடவும். இதனால் அவற்றின் மீது எந்த அழுத்தமும் ஏற்படாது மற்றும் விரைவில் கெட்டுவிடாது என்று வீடியோவில் கூறுகிறார் இல்லத்தரசி. இது குறித்த வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் இந்த தீர்வை கண்டிப்பாக முயற்சி செய்து, உங்கள் பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்.