கொரோனா நேரத்தில் டக்கரான பிஸ்னஸ் ஐடியா..!
நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய விரும்பினால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு வாய்ப்பு உள்ளது. சானிட்டைசர் தயாரிப்பு நிறுவனம் தான் அந்த வாய்ப்பு, இதற்கு அரசு ஆதரவும் இருக்கிறது.
கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் இந்த பிஸன்ஸ் சிறந்த ஐடியாவாக இருக்கும். மேலும் தற்போது பெரும்பாலான மக்கள் சானிட்டைசர்-ஐ தினசரி பயன்படுத்தி வருவதால் கொரோனா தொற்றுக்கு பின்பும் இதற்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது.சானிட்டைசர்களுக்கு இப்போது நகரங்கள், சிறிய டவுண்கள், கிராமங்கள் என எல்லா பகுதிகளிலும் நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுபோல் எப்போதும் மார்க்கெட் உள்ள பொருட்களை வைத்து தொழில் செய்தால் நீங்கள் நிச்சயம் லாபத்தை சம்பாதிக்கலாம். இத்துடன் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு கடன் தருவதால் எளிதாக இருக்கும். இந்த குறைந்த முதலீடு, அதிக மெனக்கெடு இல்லாத தொழில் லட்சக்கணக்கில் லாபத்தை சம்பாதித்துத் தரக்கூடியதாகும்.சானிடைசர்களை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால் அதற்கு நிறைய தேவை இருக்கிறது. கிருமிகளை முற்றிலும் கொல்லக்கூடியது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க இதைப் பயன்படுத்தலாம். ஹேண்டு சானிடைசர் தயாரிப்பு தொழிலைத் தொடங்கினால் நீங்கள் நல்ல லாபத்தைப் பார்க்கலாம்.நீங்கள் விரும்பினால் சிறிய அல்லது பெரிய அளவில் சானிடைசர் தயாரிப்புத் தொழிலைச் செய்யலாம். இது உங்களது நிதியிருப்பைப் பொருத்ததாகும். பிரதமர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சானிடைசர் தயாரிப்பு தொழிலைத் தொடங்குவதற்கு உதவி செய்கிறது.இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். இந்தத் தொகை உங்களது தொழிலைத் தொடங்குவதற்கு தாராளமாகப் போதும். முத்ரா திட்டத்தில் எந்தவித சொத்து உத்தரவாதமும் கேட்காமல் கடன் அளிக்கப்படுகிறது. இதனால் கடன் பெறுவதில் எந்தச் சிரமமும் இருக்காது.சானிடைசர் தொழிலை லாபகரமாக நடத்துவது குறித்து காதி மற்றும் கிராமிய தொழில்கள் ஆணையம் ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது.சானிடைசர் தயாரிப்பு தொழிலை தொடங்குவதற்கு ரூ.23.35 லட்சம் தேவை. இதில் உங்களது முதலீடு ரூ.2.34 லட்சம் இருந்தால் போதும்.தயாரிப்பு மூலதனம் ரூ.6.8 லட்சம் தேவை.