வறண்ட சருமத்திற்கு சிறந்த தீர்வு தரும் மஞ்சள் – எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே பெண்களுக்கு அழமை கொடுப்பது முகம் தான். அதிலும் மஞ்சள் முகம் இருக்கும் பெண்கள் அழகு என்பார்கள்.
இன்றைய பெண்களிடம் மஞ்சள் பூசும் பழக்கம் முற்றிலும் அழிந்து விட்டது எனலாம். பல தோல் பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும் மஞ்சளை வைத்து எப்படி முகத்தை பாதுக்காக்கலாம் என பார்க்கலாம்.
சருமத்திற்கு மஞ்சள்
மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள் அதிகமாக காணப்படுகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின், தோல் நிறம் மாறுவதைத் தடுப்பதோடு கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்கும்.
மஞ்சளில் கல்சியம் அதிகளில் இருப்பதால் அது சருமத்தை சுத்தம் செய்து எண்ணெய் தன்மையை அகற்றுகிறது.
வைட்டமின் பி6 உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, வறண்ட சருமத்தை குணப்படுத்தி புதிய செல்களை உருவாக்குகிறது.
மஞ்சளில் பல நன்மைகள் இருப்பதால் இது வயதான தோற்றத்தை முற்றிலும் அகற்றும்.
மஞ்சள் Face Pack செய்வது எப்படி?
ஒரு சிறிய பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் அதை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி 30 நிமிடங்களுக்கு பின் கழுவவும்.
இதை தினமும் முகத்தில் பூசி வந்தால் முகத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். முகத்திற்கு அழகு சேர்ப்பதோடு சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தடுக்கும்.